உதவி மையம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இலங்கையில் Leemo பற்றி விரைவான பதில்கள்.
ஆரம்பிக்க
Leemo என்றால் என்ன?
Leemo இலங்கைக்கான அன்றாட Super App. ரைட் புக் செய்யலாம், சாப்பாடும் பலசரக்கும் ஓடர் செய்யலாம், ஷொப்பிங் செய்யலாம், பார்சல் அனுப்பலாம், இடமாற்றத்துக்கு உதவி பெறலாம், வாங்கலாம், விற்கலாம் — எல்லாம் ஒரே அக்கவுண்டில்.
இலங்கையில் Leemo-வை நடத்துவது யார்?
இலங்கையில் Leemo-வை நடத்துவது, கொழும்பு 05 இல் உள்ள Leemo-வின் உத்தியோகபூர்வ franchisee ஆன Oordy Lanka (Pvt) Ltd.
எப்படி சைன் அப் செய்வது?
App ஐ டவுன்லோட் செய்து உங்கள் மொபைல் நம்பரோடு லொக்இன் செய்யுங்கள். ஒரு OTP code அனுப்புவோம் — நினைவில் வைக்க password எதுவும் இல்லை.
நான் இருக்கும் இடத்தில் Leemo கிடைக்குமா?
சேவைகள் இடத்துக்கு இடம் மாறும். App ஐ டவுன்லோட் செய்து உங்கள் லொகேஷனை செட் செய்தால், பக்கத்தில் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Leemo-வை சிங்களத்திலோ தமிழிலோ பயன்படுத்தலாமா?
ஆம். Leemo App ஆங்கிலம், சிங்களம், தமிழ் மூன்றிலும் கிடைக்கிறது.
ரைட்
எந்த மாதிரியான ரைட் புக் செய்யலாம்?
உங்கள் இடத்தைப் பொறுத்து ஓட்டோ, பைக், கார் போன்றவற்றைத் தெரிவுசெய்யலாம். பக்கத்தில் என்ன இருக்கிறது, கிட்டத்தட்ட எவ்வளவு கட்டணம் என்பதை புக் செய்ய முன்பே App காட்டும்.
பிறகு போக இப்போதே புக் செய்யலாமா? வேறு ஊருக்குப் போகலாமா?
ஆம், கிடைக்கும் இடங்களில். ரைட்டை முன்கூட்டியே ஷெடியூல் செய்யலாம், ஊருக்கு ஊர் போக புக் செய்யலாம், அல்லது மணித்தியாலக் கணக்கில் வாகனம் எடுக்கலாம்.
என் சொந்த வாகனத்துக்கு டிரைவர் எடுக்கலாமா?
ஆம். Driver மூலம், ஊருக்குள் பயணம், வேறு ஊருக்கான பயணம் அல்லது டிரைவர் பெக்கேஜுக்கு உங்கள் வாகனத்துக்கு ஒரு டிரைவரை புக் செய்யலாம் (கிடைக்கும் இடங்களில்).
Leemo இல் என்ன பாதுகாப்பு வசதிகள் உள்ளன?
ரைடின்போது SOS பட்டனைப் பயன்படுத்தலாம், உங்கள் பயணத்தை மேப்பில் லைவ்வாகப் பார்க்கலாம், ஏறும் முன்பே யார் வருகிறார் என்று பார்க்கலாம். உங்களுக்கு முக்கியமானவர்களுடன் தொடர்பில் இருக்க Family Tracker உதவும்.
சாப்பாடு & ஷொப்பிங்
என் ஓடரை நானே போய் எடுக்கலாமா?
ஆம், அந்த ரெஸ்டோரன்ட் அல்லது கடை அந்த வசதியைக் கொடுத்தால். Self pickup ஐத் தெரிவுசெய்து, App இல் பணம் செலுத்தி, கவுண்டரில் உங்கள் pickup code ஐக் காட்டுங்கள். டெலிவரி கட்டணம் இல்லை.
ஷொப்புக்கும் சந்தைக்கும் என்ன வித்தியாசம்?
ஷொப்பில் உள்ளூர்க் கடைகளிலிருந்து ஓடர் செய்யலாம். சந்தை என்பது ஆட்களுக்கிடையே வாங்கவும் விற்கவும் — விற்க வேண்டியதைப் போடுங்கள், அல்லது உங்களுக்கு வேண்டியதைத் தேடுங்கள்.
பார்சல் & இடமாற்றம்
பார்சல் எப்படி அனுப்புவது?
அனுப்ப பகுதியைத் திறந்து, எங்கிருந்து எங்கே என்று போடுங்கள். Leemo டெலிவரி பார்ட்னர் ஒருவர் வந்து எடுத்து, கொண்டுபோய்க் கொடுப்பார். கிடைக்கும் இடங்களில், காத்திருந்து எதையாவது திரும்பக் கொண்டுவரவும் சொல்லலாம்.
வீடு மாறும்போது Leemo உதவுமா?
ஆம். இடமாற்றம் மூலம், உங்களுக்கு எவ்வளவு உதவி தேவையோ அதற்கேற்ப லொறி, ஆட்கள் அல்லது இரண்டையும் புக் செய்யலாம்.
பேமன்ட்
எப்படிப் பணம் செலுத்தலாம்?
சேவையைப் பொறுத்து கார்ட், Leemo Wallet அல்லது காசு மூலம் செலுத்தலாம். Self pickup ஓடர்களுக்கு App இலேயே செலுத்த வேண்டும்.
Leemo Wallet என்றால் என்ன?
Leemo Wallet இல் ஒருமுறை டொப் அப் செய்து, Leemo சேவைகள் எல்லாவற்றுக்கும் செலுத்தலாம். ஏற்றுக்கொள்ளும் இடங்களில், Scan & Pay மூலம் QR code ஐ ஸ்கேன் செய்தும் செலுத்தலாம்.
Leemo இல் ஒஃபர்கள் இருக்கா?
ஆம். உங்களுக்குக் கிடைக்கும் promo code-களையும் டீல்களையும் பார்க்க App இல் Offers பகுதியைப் பாருங்கள்.
பார்ட்னர்கள் & உதவி
Leemo டிரைவராக அல்லது பார்ட்னராக எப்படிச் சேருவது?
டிரைவர்கள் Leemo App இலேயே ரெஜிஸ்டர் செய்யலாம். கடைகளும் சேவை வழங்குநர்களும் hello@leemo.lk க்கு ஈமெயில் அனுப்புங்கள்.
Leemo-வை எப்படித் தொடர்புகொள்வது?
App இல் Help பகுதியைத் திறந்து Leemo Assistant உடன் சாட் செய்யுங்கள், hello@leemo.lk க்கு ஈமெயில் அனுப்புங்கள், அல்லது 011 250 6332 க்கு எங்கள் அலுவலகத்துக்கு கோல் செய்யுங்கள்.
என் தனிப்பட்ட தரவு எப்படிக் கையாளப்படுகிறது?
இலங்கையின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நாங்கள் தனிப்பட்ட தரவைக் கையாளுகிறோம். இந்த இணையத்தளம் தரவை எப்படிப் பயன்படுத்துகிறது என்பது எங்கள் தனியுரிமைக் கொள்கையில் உள்ளது; Leemo App க்கு, App இலேயே காட்டப்படும் தனியான தனியுரிமைக் கொள்கை உள்ளது.
Leemo இருந்தால் வாழ்க்கை சுலபம்.
App ஐ டவுன்லோட் செய்து, கிளம்புங்கள்.
- விரைவில்App Store
- விரைவில்Google Play
QR code விரைவில்







